புவிவெப்பம் தவிர்த்தல்

குறள்
1.காடுகொண்ட முல்லை சுருங்கையிலே நித்தம்; பூமிகொண்ட வெப்பம் மிகுவதாம்.
2. மின்னாற்றல் கொணர்ந்திட கரிதனை எரித்திடவே; தன்வெப்பம் பெருகுவதாம் புவிதனில்.
3. தொழிற்கூடம் உமிழ்ந்திடும் கரியகந்தக வாயுக்கள்; காற்றில்கலந்திட ஓங்கிடும் மண்வெப்பம்.
4.சாலையோடும் வாகனங்கள் ஈட்டிடும் புகைதனிலே; கூடிடுமாம் பூமிபந்தின் உஷ்னம்.
5. கரியமில சதுப்புநில சிரிப்பூட்டுவாயுக்கள் உமிழ்வதனை ; குறைத்திட தனிவதாம் பூகோளவெப்பம்.
6. பசுங்கூட்டுவாயுக்கள் போர்வை கொள்வதால் எதிர்படாமல்; நிலைக்குமாம் நிலத்தினிலே சூரியவெப்பம்.
7. புவிவெப்பம் ஏற்கையில் பனிப்படலம்கரைந்திட நீர்மட்டம்; உயர்ந்தே நிலம்தனை உண்ணுமாம்.
8. மரம் செடிகொடியென பசுஞ்சோலைவனம் விரிந்திட; தனியுமாம் தரணியிலே வெப்பம்.
9. வீசும்காற்று ஓடும்நீரலை கதிராற்றல் துய்ப்பதனால்; உயர்வுகொளாது பூமிதனில் வெப்பம்.
10. கூடுவதாய் இருப்பின் புவியுடைவெப்பம் நிலைகொண்டே; நாடுவதாயமையும் பருவமாற்ற பேரிடர்.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (18-Mar-22, 4:44 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 80

மேலே