புகழுடைமை

குறள்
1. தன்னைத்தான் மெருகேற்றி மதிப்புற செய்திடின்;
இசைப்பட அமைவதாம் வாழ்வு.
2. தூற்றுதல் இகழென கொள்வோமாயின் என்றும்;
போற்றுதல் நற்புகழ் என்பதாம்.
3. ஆற்றுவதால் துளங்கிட எளியோர்வாழ்வு பல்குடி;
போற்றுவதால் அடைவதாம் புகழ்.
4. கைத்தேர்ந்து ஆக்கமாய் பயனுற எஞ்ஞான்றும்;
மெய்த்தேர்ந்து உயர்வதாம் நற்புகழ்.
5. பேராளுமை சமூகமாற்றம் வித்திடல் செயற்கரியசெய்திடல் ;
இம்மூன்றும் புகழ்கொள் சூத்திரமே.
6. சீர்மிகுபார்வை செயற்திறன் அனுகிட எளிமையென;
ஈர்ப்பதால் மிகுவதாம் புகழ்.
7. பிறர்கென இன்னுயிரீந்த தன்னலன்கருதா தகமையினர்;
மாண்டும் உயிர்கொண்டே அறிவர்.
8. புகழ்நாடி செய்திட்ட எச்செயலும் சறுக்கிட;
பயனின்றி தொலைவதாம் உயிர்க்கு.
9. எண்ணிலடங்கா கண்ணிலடங்கா குடியுயர்வுபெற தம்வாழ்வு;
மண்ணிலடங்கா வான்புகழ் ஏற்பதாம்.
10. புகழ் செருக்காய் தலைக்கேறி அகம்கொள;
பாழாய் கெடுவதாம் வாழ்வு.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (11-Apr-22, 1:13 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 59

மேலே