ஈதல்

குறள்
அதிகாரம்: ஈதல்
1.வறியோர்க்கு வலியறிந்து ஈவதால் என்றும்;
பெரியோர்க்கு மிகுவதாம் அழகு.
2. தன்தேவைகொண்டு மிகுதியை பிறர்க்கு ஈதல்;
இயல்பென கொண்டிடல் நன்று.
3. செல்வ செழிப்புடையோர் ஈதலைவிட வறியவர்;
தம்மெய்வருத்தி ஈவது மேலாம்.
4. ஈதலின்றி தம்தலைமுறை நோக்கி பொருளீட்டிடல்;
சாதலன்றி வேறல்ல உயிர்க்கு.
5. நல்முனைப்பாய் கொண்டிட ஈதல் குணம்;
தனித்தே உயர்வதாம் நின்புகழ்.
6. பெரிதாம் ஈதலெனும் குணக்கடல் விரிந்தே;
அரிதாம் பாற்கடல் கொள்வது.
7. முகவையேந்தி அகவை முழுதும் ஈகைகொண்டு;
உவகை காண்பது அறிவு.
8. மண்ணில் யாவர்க்கும் உயிர்கொண்டிட உணவிடல்;
ஈதலில் முழுமுதலாய் நிற்பதாம்.
9. ஈகைவழி பெற்ற பொருள்துய்த்து பல்லுயிர்;
ஏற்றம் காண தக.
10. ஈகைகொள்வோர் தானுயர்ந்து பிறர்க்கு ஈகையில்;
வாகைகொள்வோர் என அறிவர்.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (20-Apr-22, 6:25 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே