விஷமூங்கில் இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பிளவையுகிர்ச் சுற்று பெரும்படுவன் வீக்கம்
அளவில்நோய் காதெழுச்சி ஆற்றும் – அளவையுறா(து)
ஓங்கி வளர்ந்தமுலை ஓவியமே! நீண்டவிஷ
மூங்கிலிலை நன்மூலி முன்

- பதார்த்த குண சிந்தாமணி

இராசப்பிளவை, நகச்சுற்று, பெரும்படுவன், சோபை, சிலேட்டும காதெழுச்சி, கர்ணசூலை முதலிய நோய்களைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Apr-22, 12:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே