வியாபார கொள்ளை.
அன்று
வாணிபம் செய்ய
நம் நாடு தேடி
ஓடி வந்து -
வாணிபம் செய்து - பெரும்
கோணிகளில் அவர்கள்
கொள்ளை இட்டு சென்றனர்.
இன்றோ -
கணினி வர்த்தகத்தின் -
உலக மயமாக்குதலின்
வழியாக நம் நாட்டு
விளை பொருட்கள்
சந்தைக்கு வரும்முன்
விளைவித்தவனுக்கு
கிடைக்கும் - நஷ்டத்தையும்
வியாபாரிக்கு - லாபத்தையும்
மக்களுக்கு - விண்ணை தாண்டும்
விலைவாசியையும் கொடுத்து -
கொள்ளை அடிக்கிறார்கள்.
விளைவித்தவன் வயிறேரிகிறான்
வியாபாரியோ குளிர் காய்கிறான்
அவன் வயிற்ரேரிச்சலில்.
விளங்குமா இந்த சமுதாயத்துக்கு?
தன்னை -
விலங்காக்கி - சவாரி செய்கிறார்கள்
பண முதலாளிகள் என்று.
விளங்கும் பொழுது
நீ மண்ணோடு மண்ணாகி போவாயே
மனித இனமே.
விழித்தெழு விரைவில்.
துளிர்த்தெழு புது தளிராக -
நடையிடு வீரனாக -
நன்மைக்காக.

