கலைவாணி ........!

அறிவுக் கண்களாய் இருப்பவள்
ஞானச் சூரியனாய் திகழ்பவள்
வெள்ளைக் கமலத்தில் வீற்றிக்கும் நாயகி
வேத நீதிக்கு எல்லாம் வித்தான பரஞ்சோதி

மழலயின் சொல்லாய் ! மாந்தர் தேன் குரலாய்
குயிலின் பாட்டாய்! மயிலின் வண்ணத் தோகையாய்!
வான் மேக நிலவுக் கூட்டமாய் ! கல்விச் சாலையில்
ஜாதி மத பேதமின்றி எங்கும் நிறைந்திருப்பவள் !

இருட்டு உலகின் திரவுக் கோலாய் !
அறியாமை அகற்றும் ஒளி விளக்காய்!
ஞானத்திலே ! பர மோனத்திலே !
நாடு நாயகமாய் திகழ்ந்திடும் கலைச் செல்வி !

இல்லை என வந்தவர்க்கு என்றும்
இல்லை எனச் சொல்லாமல் இருக்கும்
கலை அனைத்தையும் காற்றுத் தரும் நாயகி !
கவிஞர் நெஞ்சில் எண்ணமாய்! எழுத்தாய்
உலா வரும் அறிவுச் ஜோதி !

திருவள்ளுவனின் திருக்குறள் பாவிலும் !
கவி கம்பனின் கவிச் சோலையிலும்!-சிலம்புச்
செல்வன் இளங்கோ சிலப்பதிகாரத்திலும் - இதோ
எழுத்து இணையதலத்தில் எழுதும் கவிஞர்
பாட்டிலும் கொலு வீற்றுக்கும் நாயகி !

படைத்தவனே வியக்கும் வண்ணம் அறிவுப்
படைப்புக்களை படைக்கவைக்கும் கலையரசி !
அருட்பெரும் ஜோதி ஆனந்தக் கலைவாணி !
சரஸ்வதி தேவியின் திருப் பாதம் பணிவோம் !












எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Oct-11, 6:33 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 577

மேலே