தமிழனென்று தலை நிமிரடா....!!
பொன் மொழிகள்
பல சொல்லி
பழமொழிகள்
பல கேட்டு
தமிழ் மொழியின்
மேன்மை சொல்ல
தருணம் எம்மை சேர்ந்தபோது
பிறமொழியில்
மோகம் கொண்டு
நாகரீகம்எனச்சொல்லி
நம்மினம் பட்டதுன்பம்
நாம் மறந்து
நா தட்டுத்தடுமாறி
இன்று பேசியது தமிழ் மொழியாம்
எம் மொழியை
மேலை நாடவரின்
மொழியில் பிழையின்றி
தாய் மொழியை
கீழ் மொழியாம் என்றுரைத்து.......
தலைக்கனம்கொண்டு...
பாரதியும்
கம்பனும்
வள்ளுவரும்
இனியாளும்
நாவலரும்
தமிழிற்காய்
பாடுபட்டு வாழ்ந்தவர்கள்
பார் போற்றும் இவர்களைப்போல்
நீ வாழவேண்டாம்
சாதாரண தமிழ் மகனாயேனும்
தமிழ் வளர்த்தால் போதும்
புரிந்து நீ
கொன்றிடாதே தமிழை
இனியேனும்
தமிழ் தளைத்திடட்டும்
கலப்புகளும் சலனங்களும்
இன்றி......
தமிழனென்று தலை நிமிர்ந்து
தைரியமாய் நீ நின்று.......!!!!