காதல் கவிதை சேரவில்லையா
நான் எழுதும் காதல் கவிதை சேரவில்லையா?
என் காதல் வலிகள் உன்னை தாக்கவில்லையா?
நெஞ்சோடு நாளும் தனிமைதானே....
உன்நினைவு கூட்டும் சோகம்தானே....
உன்னை கண்ட பின்புதான்
கவிஞனாகி ஜெயித்தேன்.
உன்னை பிரிந்த போதுதான்
மனிதனாகித் தோற்றேன்.
நீ தந்த வலிகளை நாளும் சுமக்கிறேன்...
உன் நினைவில்தானடி நானும் தவிக்கிறேன்.
உலகம் என்ன சொல்வது?
உறவு என்ன பார்ப்பது?
நீயும் நானும் என்று சேர்வது?
காதலில் மூழ்கியே போனது.
விழிகள் மூடிக் கிடக்கையில்
என்னுள் எங்கும் நிறைந்தாய்.
விழி திறந்த போது நீ
விண்ணில் பறந்து மறைந்தாய்.
என் நினைவு தாண்டியே உன்னைத் தேடினேன்...
உன் நினைவில் மூழ்கியே நானும் சாகிறேன்...
கண்கள் என்ன சொன்னது?
கனவு எங்கு போனது?
காற்றைத்தேடி நானும் கேட்கிறேன்.
காலமே பாறையாய் போனது.