சக்களத்திப் பாடல்
வருவாரு போவாரு
வாசலிலே நிப்பாரு
சிரித்தாலும் பேசுவாரு
சிறுக்கி வெச்ச கைமருந்து
மறந்தா மறப்பதில்லை
மருந்துதின்னா ஆவதில்லை
செத்தா மறப்பதில்லை
சேவலோகம் சேருமட்டும்
என்னை விட்டுவிட்டு
எளய தாரம் கட்டினவ
போற வழியில உன்னை
பூநாகம் தீண்டாதோ?
அடிக்கணும் குளிர் காய்ச்சல்
ஆறுமாசம் ஒருவருஷம்
எடுக்கணும் பாடைகட்டி
எம்மனசு பாலாக
(நான் ரசித்த ஒரு பழம்பாடல் உங்களுக்காக )