காதலின் புகழ் பாரதி கண்டது
மாதரின்பம் போற்பிறிதோ ரின்ப முண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை யவளாலே யெய்த வேண்டும். பாரதியார்
கண்டதும் காதலென்றால் யார் ஏற்பர்
நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பார்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினுள்ளே காதலேன்றால் உறுமு கின்றார் ....... பாரதியார்
நாட்டின் கலாச்சார நிலை
வன்னியரும் பெண்ணெடுக்கார் அந்நியரில் உண்மையிது
முன்னவர் பெண்ணை கொடுப்பதேது --. முன்பின்
அறியான் தொடர்பில் தவறுபவள் பெண்ணே
குறித்ததற்காய் தப்பும் முரண
திறமைத் தகுதியுடன் வீரப் பெருமை
சிறப்பில் மயங்கிடுவர் பெண்டிர் --. மறவரின்
பெண்டிர் மயங்கார் யெவரிடம் கண்டதும்
அண்டியு மாடார் அடவு
நல்லமனை யாளவளே நன்னடை நேர்பார்வை
கொல்விழி கொண்டமாதர் சொல்
தேடின் கிடைத்திடும் பெண்டிராம் பாரதிப்பெண்
தேடியுல கில்நீவீர் தேருங்கள் -- ஆடுமே
கொண்டாடு புத்துல குக்கு முயிர்தரும்
பெண்ணது காமமில்லை யென்று
பெண்ணில்லை யென்றால் இகத்தில் பிறப்பேது
கண்கண்ட தெய்வமென்பார் பாரினில் -- பெண்ணவளும்
விண்ணிழிந்து வந்தவிந்தில் விந்தையுரு தத்தனள்
கண்தேடும் காமப்பெண் அன்று
கண்டவள்தான் தெய்வம் கடவுளும் ஆவளோ
நண்டாய்க் குழிபறிப்பள் பாரு