உன் காதல் துணையாக வேண்டுமென

புரியாத மொழியில்
புரிகின்ற அன்பை
மௌனத்தில் மட்டும்
சொல்ல துடிக்கிறேன்.....

காற்றிலாடும் உன் கூந்தலை
காலமெல்லாம் பார்த்து
இரசிக்க காத்துகிடந்தேன்.....

வார்த்தையால் சொல்ல நினைக்கும்
என் காதலை சைகையால்
உணர்த்த முயற்சிக்கிறேன்....

தனிமையில் துடிக்கும் மனதிற்கு
உன் காதல்
துணையாக வேண்டுமென
ஆண்டவனிடம் கட்டளையிட்டேன்.....

என் காதலை உணரும் வரை
காலத்தின் துணைகொண்டு
உன் காதலை வெல்வேன்.....

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (2-Apr-22, 8:25 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 240

மேலே