ஒரு சுதந்திர பறவை
ஒரு சுதந்திர பறவை
பறவை பறக்கட்டும்! சுதந்திரமாய் பறக்கட்டும்.
அவள் வானத்தைத் தொடட்டும்.
அவள் மேகத்தின் வழியாக செல்லட்டும்.
அவள் புதிய உலகத்தைச் சந்திக்கட்டும்.
அவள் ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்லட்டும்.
அவள் உணர்வுகள் சிறிது தேனை சுவைக்கட்டும்.
அவளை அனுபவிக்க விடுங்கள்.
அவள் என்றும் இளைமையாக மாற்றட்டும்.
அவள் ஒரு புதிய உலகத்தை நிறுவட்டும்.
அவள் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கட்டும்.
அவள் வரம்புகளுக்கு அப்பால் செல்லட்டும்.
தோல்விகளையும் வெற்றிகளையும் அவள் சந்திக்கட்டும்.
அவள் சொந்த இடத்தை இன்பமாய் அனுபவிக்கட்டும்.
அவள் புதிய இடத்திற்குச் செல்லட்டும்.
அவள் வையகமெல்லாம் பெயர் நிரப்பட்டும்.
அவள் இந்த விண்மீன் மண்டலத்தில் உலாவட்டும்.
அவள் சாதிக்கும் புதிய சாதனைகள் கொண்டு வரட்டும்.
பூமியில் புதுமைப் பெண்ணாக அவள் வீர மகளாக என்றும் திகழட்டும்