விருப்ப மடல்

நீ தேவர்கள் கடைந்தெடுத்த
அமுதம் அல்ல
தேவதைகள் கடைந்தெடுத்த
அமுதம்

பாற்கடலைக் கடைந்தெடுக்காது
தமிழ் நூற்கடலைக் கடைந்தெடுத்த குமுதம்

அன்பே
கலூரியில்
நீ இலங்கலையும் படிக்கிறாய்
இளைஞர்களையும்
படிக்கிறாய்
என்னை மட்டும்
பிடிக்காதது போல்
நடிக்கிறாய்


நீ மது
மதுரையில் பிறந்த மது
நீ மது
தென்னைக்குப் பிறக்காது
உன் அன்னைக்குப் பிறந்த
மது

நீ மாது
பூவையாய்ப் பூத்த மாதுளை
கடப்பாரை இன்றி
உன் கடைக்கண்
பார்வையால் என் இதயத்தில் போட்டாய். மா துளை

ஐயம்
நீ கன்னியா
குமரியா
இல்லை
கன்னியா குமரியா என்று

கல்லூரி நேரத்தில்
அணைந்து போகிறது
உன் செல்லு
அந்நேரம் உன்னை நினைந்து அழுகிறது என் செல்லு

ஒரு நாள் தான் வாழ்கிறது
செல்லு
ஒரு நாளாச்சும் என்னை
விரும்புறேன்னு சொல்லு

கவிஞர் புதுவை குமார்

எழுதியவர் : Kumar (6-Apr-22, 12:44 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : viruppa madal
பார்வை : 116

மேலே