என் காதல் பிசாசே 555
***என் காதல் பிசாசே 555 ***
என் சகியே...
உன்னை சந்திக்க பலமுறை
நான் முயற்சித்தும் முடியவில்லை...
உன் அன்பு வலையில் நானாக
வந்து சரணடைந்தேன்...
சரணடைந்த என்னை நீயாக சிறை
பிடித்ததாய் கர்வத்தில் இருக்கிறாய்...
உன் உதட்டோரம்
மச்சம் கண்டதும்...
எனக்கு எச்சம்
வைக்க தோணுது...
உன் கைகள் வெட்கத்தில்
அந்நேரம் முகத்தை மூடுமா...
காற்றில் பறந்த உன் கூந்தல்
என் மேனியில் பட்டதும்...
என் ஆடையெங்கும் உன்
கூந்தல் வாசம் வீசுதடி...
கண் சிமிட்டும் நேரமெல்லாம்
ஏனடி உதடு சுழிக்கிறாய்...
உன் கன்னக்குழியில்
விழுந்தவன்தான்...
இன்னும்
எழவே இல்லையே...
உன் சிறை கைதிக்கும்
அவ்வப்போது விடுதலை கொடு...
உன் நெற்றி தொட்டு
கன்னம் தழுவி...
உன் கழுத்தின் மச்சத்தில்
எச்சம் வைக்க...
கண் அசைவில்
தொடங்கிய நம் காதல்...
வாழவேண்டும்
கல்லறையில் உறங்கினாலும்.....
***முதல்பூ .பெ .மணி .....***