ஒற்றைப் பட்டம்
படித்துத் தான் முடித்துவிட்டாயே
பின்னர் ஏன் மீண்டும் மீண்டும்
எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறாய்
என்று கேட்ட அம்மாவிற்கு
நான் எப்படி சொல்லுவேன்..
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
பிடித்த ஒற்றை பட்டத்தினை பெயருக்கு
பின்னால் போட விரும்பி
ஓரிரு மாதங்கள் போராடி தோற்றுப் போனேன்.
மறுக்கப்பட்ட
ஒற்றைப் பட்டம் ஏற்படுத்திய வலிக்கு
இன்னும் மருந்திட்டு கொண்டிருக்கிறேன்
பெயருக்கு பின்னால்
பல எழுத்துக்களைப் போட்டு...
என்று. ,
அன்புடன் ஆர்கே ..

