சென்னை தான் சார்
சென்னை எனக்கு சொந்த ஊர்
கோடம்பாக்கம் என் பகுதி பேர்
அங்கே உறவுகளோ பத்து பேர்
கண்டதில்லை இங்கே ஒரு ஏர்
இப்போது இந்த ஊரையும் பார்
சந்துக்கு சந்து மருந்துக்கு பார்
நிலைமையை மாற்றியது யார்
அது உனக்கு தெரியாமலா,சார்
மழை பெய்தால் வெள்ளம் சார்
வெயில் மிக கொளுத்துது சார்
ஆனாலும் நல்ல ஊர்தான் சார்
யாரையும் வாழவைக்கும் சார்!