சில விலங்குகள் சில பாடங்கள்

அணில் சுறுசுறுப்பான படுசுட்டியான குட்டி விலங்கு
நீயும் அதைத் போல துருதருவென விளங்கு!
ஒரு பிரம்மாண்டமான பொறுமைசாலி மிருகம், யானை என்பது அதன் பேரு
நீயும் அதன் பொறுமை கொண்டு ஏறுநடை போட்டு வாழ்வில் முன்னேறு!

பூனைகள் தான் இன்று அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் ரசிக்கப்படுகிறது
நீயும் சுத்தமான மிருதுவான உடலுடன், மனதுடன் இருப்பின் மனம் ஏன் சங்கடப்படுப்போகிறது?

எருமை மாடு பசு மாடு எதுவாயினும் பால் தருகிறது, வண்டி இழுக்கிறது
நீயும் அதைப் போல அன்பைத் தந்து, ஊக்கமுடன் உழைத்து பிழைக்கிறது!

டால்பின்கள், அடாடா அதன் அறிவுடன் கூடிய விளையாட்டை எவ்வளவு நாம் விரும்புகிறோம்!
அதை விட அதிக அறிவு படைத்த நாம் ஏன் மகிழ்ச்சிக்காக படாத பாடு படுகிறோம்?

நாயைப் பற்றி சொல்லாமல் வளர்ப்பு விலங்குகள் கவிதை நிறைவுறாது!
நாயின் நன்றி காட்டும் ஒரு செயலை மட்டுமே மனதில் வைத்து அதன் பிற காரியங்களை அறவே செய்யாமல் இருப்பின் நம் ஒழுக்கம் இழிவுறாது!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (7-Apr-22, 7:54 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 72

மேலே