உணர்வோடு உறவாடும் காபி
இதயத்தை இதமாய் வருடும்
இதமான காலைப் பொழுதிலே
ஜன்னலோர அருகிலிருந்து
அருந்தும் ஒரு மிடறு காபி
இதயத்தின் இதமான நினைவுகளை மீட்டிப் பார்த்து அருந்துகையில் அற்புதமே...
பணிகள் முடித்து விட்டு
அருந்தும் ஒரு மிடறு காபி
உழைப்பின் களைப்பை நீக்கி
சுகமான உற்சாகத்தை தருவது அற்புதமே...
வாசிக்கும் போது அருந்தும்
ஒரு மிடறு காபி
வாசிப்புச் சுவைக்கு
இன்னுமொரு சுவையூட்டுவதும் அற்புதமே...
காபி சிலருக்கு
உணர்வுகளோடு கலந்தது...
களைப்பை நீக்கிட...
உற்சாகத்தை உருவாக்கிட...
சோகத்தை மறந்திட...
சந்தோஷத்தை பகிர்ந்திட...
பல உணர்வுகளோடு
உறவாடுகிறது காபி...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா