உடல் உண்டு என்றால் உபாதை உண்டு
ருக் யஜுர் சாமம் அதர்வணம் எனும் நான்கு வேதம்
ஆனால் எனக்கு தெரிந்தது ஒன்றே, ஆயுர்வேதம்
விருப்பம் இன்றி எப்போதாவது எடுத்தேன் ஆங்கில மருந்துகள்
சில வருடங்கள் தொடர்ந்தேன் ஹோமியோபதி கோலிகள்
என் உடல் எனை கேலி செய்தது, தொடங்கினேன் ஆயுர்வேத வழிகள்
என்ன செய்ய, என்ன செய்தும் ஏதோ ஒரு உடல் மன உபாதை படுத்தி எடுக்கிறதே!
நோய் நொடி இன்றி வாழ்பவர்கள், கவலை பயமின்றி அநுபவிப்பவர்கள்!
மருந்து எடுக்காமல் வாழ்பவர்கள் ஆரோக்கியமான அபூர்வமானவர்கள்!
நோய் இல்லை அதனால் மருந்து இல்லை என்று வாழ்வோர் இவ்வுலக வாழ்வை முழுமையாக , வளமுடன் வாழும் தகுதி பெற்ற மாபெரும் அதிர்ஷ்டசாலிகள்!