இப்படி இருந்தால் எப்படி இருப்பான்

எல்லாம் நேரத்தில் என செயல் படுபவர் பாடு அவ்வப்போது திண்டாட்டம் தான்
நானும் நேரத்தில் காரியங்கள் செய்யும் வகையைச் சேர்ந்த ஆள் தான்
எப்போதாவது ஒரு திருமணத்திற்கு சென்றால் காலையில் சிற்றுண்டி வகை
இதை உண்டால், உண்டாகும், நேரத்தில் சாப்பிட முடியாமல் போய் பசியுடன் பகை
8 மணிக்கு கஞ்சி குடித்து விட்டு மதியம் 12 மணிக்கு உணவெடுப்பவன்
7 மணிக்கு கனமான சிற்றுண்டி உண்டு 12 மணிக்கு எப்படி உண்பான் அவன்?
சாப்பாடுக்கும் சேர்த்து மொய் எழுதிவிட்டு சாப்பிடவில்லை என்றால்?
மாலை நேரத்தில் அதிகம் பழங்கள் மட்டுமே உண்டு பசியாறியவன் !
சூடான போண்டா பஜ்ஜியை ருசித்தால் இரவு உணவு எப்படி உண்பான் அவன்?
இரவு 10 மணிக்கு தூங்குபவனை இரவு சினிமாவுக்கு கூட்டி செல்வது நியாயமா?
காலை ஐந்தரை மணி எழுபவன் எப்படி செய்வான் தியானம், உடற்பயிற்சி?
அமைதியான இடத்தில் இருந்து பழகி விட்டு கோயம்பேடில் எப்படி வசிப்பான்?
தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து சிரிக்கும் ஆளு எவ்வளவு பேரைதான் பார்த்து பல் இளிப்பான்? இளிக்க மாட்டான், ஆனால் முகம் சுளிப்பான்!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (5-Apr-22, 1:35 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 413

மேலே