எவரும் எதற்கும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல

அரசியல்வாதி மட்டுமே காரியவாதி அல்ல!
ஒவ்வொரு மனிதனும் ஒரு விதத்தில் காரியவாதியே!
ஒவ்வொரு களவாளி மட்டும் திருடன் அல்ல!
மனிதர்கள் அனைவருமே ஒரு விதத்தில் திருடர்களே!
ஒவ்வொரு பாபம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை!
பாபமே செய்யவில்லை என கர்ஜிப்பவனும் குற்றவாளியே!
மன்னிப்பு கேட்டு ஆலயத்திற்கு செல்பவர்கள் மட்டும் பாபிகள் அல்ல!
கடவுளை பிரார்த்தி, உன் பாபம் போய்விடும் என அறிவுரை கூறுபவரும் பாபிகளே!
கடவுள் யார் என தெரியாமல் இருப்பவர்கள் மட்டும் மூடர்கள் அல்ல!
இதுதான் கடவுள் என ஆணித்தரமாக சொல்லும் ஒவ்வொருவரும் மூடரே!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (4-Apr-22, 7:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 171

மேலே