காமம் புனிதமானது

❤️🧡💛💚💙💜💜🖤🤍🤎❤️

*காமம் புனிதமானது*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

# காமம்

காதல்
பெற்றெடுத்த குழந்தை...

கட்டில் பூமியில்
ஆண்குறி ஏரால்
பெண்குறி வயலை உழுது
கருப்பயிர் நடவு செய்து
வேர்வை நீர் பாய்த்து
குழந்தை தானியம்
அறுவடை செய்து
மனித இனத்தைஅழியாமல்
விருத்தி செய்யும் விவசாயி...!

இது
உடலில்
உண்டாகும் பசி.....

மனித உணர்ச்சிகளில்
எரிந்து கொண்டிருக்கும்
அணையாத நெருப்பு....

இது
முதலிரவு கணக்கை
சரியாக போட சூத்திரம்
உருவாக்கியதால்.....
இதன் பெயராலையே
காமசூத்திரம் என்று
அழைக்கப்படுகிறது...

ஆண்களையும்
பெண்களையும்
இணைக்கும் பாலம்.....

அளவோடு
இருந்தால் அமுதும்...
அளவுக்கு
மீறினால் நஞ்சு....

ஆண் உடலில்
முக்கால் பகுதியும்...
பெண் உடலில்
கால் பகுதியும் நிறைந்துள்து...

உதடுகளைக் கடித்துக்கொண்டு
தேகத்தை தொட்டுக் கொண்டு
முத்தத்தை சாப்பிட்டு
வேர்வை நீர் பருகி
பெருமூச்சி ஏப்பம் விட்டு
பசி போக்கும் மாய மனிதன்.....!

உடலுறவு
முதலிரவு
மன்மதலீலை போன்ற
சுப நிகழ்ச்சிகள் நடக்க
காரணமாக இருந்தாலும்...
சில சமயங்களில்
கற்பழிப்பு
பலாத்காரம்
வன்புணர்ச்சி போன்ற
துக்க நிகழ்ச்சிகள் நடக்க
காரணமாகவும்
இருந்து விடுகிறது.....!

முறையானவர்களிடம்
தீர்த்துக்கொண்டால்
புனிதமானது...
முறையற்றவர்களிடம்
தீர்த்துக் கொண்டால்
கலங்கமானது..

பெரும்பாலான கலைகள்
உருவானது
இதன் கைவண்ணத்தில் தான்....

பலர் சொல்வார்கள்
இததைக் கழிவு என்று
முறையாக பயன்படுத்தினால்
நல்ல உரமாகும் .....

ஆணின் உயிரணுவையும்
பெண்ணின் அண்டத்தையும்
உடலுறவு
சுப நிகழ்ச்சியின் மூலம் ...
மோகமேடையில
நம்பிக்கையை
சாட்சியாக வைத்து
இருளின் முன்னிலையில்
முத்தம் மேளம் முழங்க
புணர்ச்சி மாங்கள்யத்தால்
இரண்டையும் -ஒன்றாக
சேர்த்து வைக்கும் ஐயர்....!!!

காதல் புனிதமானது
என்றால்.....
அது பெற்றெடுத்த
காமமும் புனிதமானதே!

*கவிதை ரசரிக*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Apr-22, 10:38 pm)
பார்வை : 213

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே