நிலா விடு தூது

நீந்திப்போகும் நிலவே!
என் நினைவில் உள்ள
அவளைக் கண்டாயோ!
அவள் அழகில் உன்னை வெல்லும்
திறன் கொண்டவள்!
பேச்சில் மின்னலை வென்றிடுவாள்!
அன்பில் கடல் அலையைக் கொன்றிடுவாள்!
அவள் நட்பிற்காக சூரியனும் தவமிருப்பான்
மலைத்துளி அவள் மீது விழ
அனுமதி வேண்டிக் காத்திருக்கும்.
பச்சை பசுங்கிளியும்- அவள்
அழகில் மயங்கி பாடும்
அவள் கண்களைக் கண்டால்
கவினனும் தன் கலை மறப்பான்.
அவள் உதட்டோர சிவப்பை
கண்ட நாள் முதல்
கண்மூடி துயில் கொள்ளேன்! நான்
அவளைக் கண்டாயோ!
என் அன்பு நிலவே!.......

எழுதியவர் : பெரியகவுண்டர் (10-Apr-22, 7:49 pm)
Tanglish : nila vidu thootu
பார்வை : 349

புதிய படைப்புகள்

மேலே