ஜலியான்வாலா பாக் படுகொலை

அந்த சுவரில் மட்டும் அல்ல
இதயத்திலும் மாறவில்லை வடு!
மரபியல் படி
இன்னும் பிறக்கும்
எல்லா இந்தியன் இதயத்திலும்
மாறாது அந்த தழும்பு!
அந்த இரத்த வாசம்!
இன்றும் உயிரை
உறைய செய்கிறது.
அந்த மரண கூக்குரல்!
இன்னும் காதில்
கேட்கிறது; வலிக்கிறது.
அது இரத்த நிலம்!
அதில் இந்தியர்கள்
புதைக்க படவில்லை.
விதைக்கபட்டிருக்கிறார்கள்!
அதன் வேர்
கன்னியாகுமாரி வரை
ஆழ்ந்துள்ளது
அதன் இலைகள்
காஷ்மீர் வரை
உயர்ந்துள்ளது
அதன் கிளைகள்
அருணாச்சலம் குஜராத் வரை
படர்ந்துள்ளது.
வந்தே மாதரம்!!