இதயத்தில் உன் நினைவு 555

***இதயத்தில் உன் நினைவு 555 ***
என்னழகே...
கண்டநாள் முதல் என் மனதை
உன்னிடம் கொடுத்ததிற்காக...
நான்
உன் பின்னால் வரவில்லை...
கொடுத்தத்தை திருப்பி
வாங்கும் பழக்கம் இல்லை...
மாற்றாக உன் இதயம் வாங்கி
செல்லவே வருகிறேன்...
தினம் தினம்
உன் பின்னால்...
என் மனதின்
தேடல் என்னவோ...
நீ பேசும்
வார்த்தைகள் மட்டும்தான்...
நீ பிடிக்கவில்லை பிடிக்கவில்லை
என்று சொன்னாலும்...
என் அறிவு வேண்டாமென்று
சொன்னாலும்...
மனது உனக்குத்தான்
எழுதி வைத்திருக்கிறேன்...
கண்ணில் உன் பிம்பம்
இதயத்தில் உன் நினைவு...
என்னை நீ முறைத்து
செல்லும் போதெல்லாம்...
உன் விழி பார்வை
என் உயிர்வரை...
தீவிரவாதி போல
ஊடுருவி செல்லுதடி...
என்னழகே எப்போது என்னை
உன் மனத்தால் மணந்துகொள்வாய்.....
***முதல்பூ .பெ .மணி.....***