பிரிந்தே போகுமடி

உன்...
விழியோரப் புன்னகையில் - நான்
விழுந்து விட்டேனடி.

உன்...
இதழோரப் புன்முறுவலில் - என்
இதயம் தொலைத்தேனடி.

காற்றாட நீவிட்ட கூந்தலில் - நான்
காற்றாடியாய் பறந்தேனடி.

நாட்டியமாடும் உன்னிடை அசைவில் - என்மனம்
நாட்டியம் ஆடுதடி.

பூத்துக்குலுங்கும் உன் இளமை - என்னை
பூப்பந்தாய் ஆட்டுதடி.

பாத்துப் பேசும்போது உன் தெத்துப்பல் - என்னை
பித்துப்பிடிக்க வைக்குதடி.

ஊடலில் நீ கோபமாய் பார்க்கும்போது - தொடர்
பட்டாசாய் வெடிக்குதடி.

பேசாமல் சிலநாட்கள் நீ மௌனிக்கும்போது
என்னுலகம் செவிடாய்ப் போக்குதடி.

என்னைவிட்டு தனியே நீ
கனவிலும் பிரிந்து போகாதேடி.

பிரிந்தால் அக்கணமே எந்தன் உயிர்
பிரிந்தே போகுமடி..

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Apr-22, 6:32 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : pirinthey pogumadi
பார்வை : 209

மேலே