முரளி அறளி

தம்பி கரிதாசு,
@@@@@
என்ன அண்ணா, எத்தனை தடவை சொல்லறது? என் பேரு ஹரிதாஸ்.
@@@@@
நான் என்னடா செய்யட்டும் தம்பி. உனக்கு அப்பா வச்ச பேரு என்ற வாயில் நொழையமாட்டங்குதே. நான் படிக்காதவன். நம்ம ஆடுமாடுங்கள மேய்க்கிற அண்ணாகிரி. அந்த கிரிக்கே இதுவரைக்கும் என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியல. நீ படிச்சு பெரிய வேலைல சென்னையில் இருக்கிற. உன்னோட (இ)ட்டைக் குழந்தைங்க பேருக்குச் சொல்லுடா தம்பி கரிதாசு.
@@@@@@
மூத்த குழந்தை பையன். அவள் பேரு 'முரளி'. (இ)ரெண்டாவது குழந்தை பெண் குழந்தை. அதுக்கு 'அரளி'னு பேரு வச்சிருக்கோம்.
@@@@@
(இ) ரண்டும் இந்திப் பேருங்களாட்டம் இருக்குது.
@@@@@
ஆமாம் அண்ணே.
@@@@@
சரிடா கரிதாசு அந்தப் பேருங்களுக்கு என்னடா தம்பி அர்த்தம்?
@@@@@
இந்திப் பேருங்களுக்கெல்லாம் யார் அண்ணே அந்தப் பேருங்களோட அர்த்தம் தெரிஞ்சு வைக்கிறாங்க.
@@@@@
'அரளி' தமிழ்ப் பேரு மாதிரி இருக்குது. அறளிப் பூச்செடியைக் குறிக்கிற பேரா இருக்கும்.
@@@@@
இல்லண்ணே. இந்தி 'அறளி'.
@@@@@
சரி. சரி. இந்தக் காலத்தில் நம்ம தமிழர்கள் எல்லாம் இந்திப் பேருங்களத்தான் அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்கடா. எல்லாம் சினிமா, டீவி கதைக்களம் பார்த்துக் கெட்டுப் போயிட்டாங்கடா.
πππππππππππππππππππππππππππππππππππππππ
Murali = flute
Arali = Goddess Durga, One who tears.
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாட்காம்

எழுதியவர் : மலர் (6-May-22, 7:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 80

மேலே