அம்மா❤

ஈரெட்டு வயதில் மனமுடித்து
மண வாளன் கைபிடித்து
தூர தேசம் சென்றடைந்த நீ,
ஒரு சம்சார சகாப்தத்தை
நிசப்தமாய் எழுதிய "மகாகவி"...

வாழ்வின் ஒவ்வொரு நெளிவுசுழிவிலும்
நெருப்பில் கணன்று இரும்பாக
நிமிர்ந்து நின்ற உன்முன் எனைநானே
எறும்பாக உணர்ந்த நிமிடங்கள் பற்பல...

உன் வாழ்வில் நீ எழுதிய
மஹா அத்யா யங்களை
உற்று நோக்கி பற்றி முன்னேறும்
இணை யாவருக்கும் மணமுறிவு
என்ற சொல்லே அர்த்தமற்று போகும்...

மங்காத நிலவாக ஜொலிக்கும்
உன் அக அழகு புறகண்
கொண்டு நோக்கும் மூடர்க்கு
காணக் கிடைக்காத கனவாக
மாறும்...

நீ பட்ட துன்பம் யாவும்
என் கண்முன் நீங்காது
நிழலாக நின்று நோக்க
அப்பாடம் படித்த நான்
எனை நானே செதுக்கும்
சிற்பி ஆனேன்...

ஏட்டுச் சுரக்காயை படித்த,
படித்த மேதைகள் செயற்கரிய
பல விஷயங்களை மிக சுலபமாக
செய்து பல சாதனைகளை நிகழ்த்திய
நீயே, என் பார்வையில் சாதனை
பெண்...

வயோதிகம் உனை வந்தடைந்து
வருடங்கள் பல கடந்த
இவ்வேளையிலும் உனை படைத்தவன்
உன்பால் காட்டும் நம்பிக்கைக்கு
அளவேயில்லை....

ஆம்,

படைத்தவன் நமை சோதிக்கவே
பல இன்னல்களை ஏற்படுத்தி
மெரு கேற்றுவான் என்ற
சொல்லுக்கு ஏற்ப...

வயோதிகத்தால் நீபடும் வேதனைக்கு
ஈடாக வியாதி ஒருபுறம் உனைத்
தாக்க இவை யாவற்றையும்
தூசியாக உதறி வாழ்வில்
முன்னேறும் உன் ஈடு இணையற்ற
தைரியம் எனை பிரமிப்பில்
ஆழ்துவது நானறிந்த உண்மை...

நீ உன்னுள் தேக்கிய
அளப் பறியாத தைரியத்தை
குழைக்க உனை படைத்தவன்
முயலும் தருணங்களி லெல்லாம்
நீ வீரு கொண் டெலுவதைக்
கண்டு பேராச்சரியம் அடைகின்றேன்...

நீ பிரித்தளித்த சொத்துக்களில்
பங்குபெற இயன்ற என்னால்
உன் வியாதிக் கொடுமையில்
பங்குபெற இயலாத நிலைமைக்கு
மிகவருந்தும் உன் தொப்புள் கொடி
உறவின் அவளக்குறள் கேட்கின்றதா?

உன் வேதனையை பங்குபெற
இயலுமாயின், அதில் முதல்முகம்
எனதாயிருக்கும் என்பது திண்ணம்.
என் ஆழ்மனதில் இருந்து
எழும் அவளக்குறள் இஃது.

இயலாமையை நித்தம் நினைத்து
மனமுறுகி உன் வேதனையை
கண்கொண்டு காண சகிக்காத
உன் இரத்தம்...

நீ அளித்த வசதியில்
திளைக்கும் என்னால்
உன் வேதனையில் எள்ளளவும்
பங்குபெற இயலாத நிலைநினைந்து
வெட்கி தலைகுனி கின்றேன்
அம்மா❤.

எழுதியவர் : கவி பாரதீ (8-May-22, 1:30 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 1140

மேலே