PORKKALAM AANATHU NENJAM
காய்த்தது வான்நிலா காம விரகத்தில்
தேய்ந்தது தோழியென்னு டல்
புறம்சென்றான் போரிட இன்னும்
திரும்பவில்லை
போர்க்கள மானதுநெஞ் சம்
கலம்ஒவ் வொன்றிலும் வந்தனர்
நெய்தலே
என்னவன் எங்கேநீ சொல்
கலம்அதோ போரரக்கன் வந்தானா
பார்தோழி
உன்டெலிஸ் கோப்விழி யால்
காமப்போர்க்க ளம்தன்னில் நான்தனித்தே போராடி
காமவேளே வெல்கிறான் ஏன்
கட்டித் தழுவி கனிமுத்தம் தந்தெனை
விட்டுச்சென் றான்ஐ யகோ