புல்லுக்கட்டு

ஏன்டி கமலா எப்படி வடக்கிருந்து வந்த? நீயும் வீட்டுக்காரன், பையன் எல்லாம் நல்லா இருக்கிறீங்களா?
@@@##@
நாங்க நேத்து வந்தோம் பெரியம்மா. நாங்கள் நலம். நீங்க நலமா இருக்கிறீங்களா? நான் திருமணம் ஆகும் வரை 'கமலா'வா இருந்தேன். வடக்கே போனதும் என் பேரை 'கம்லா'னு மாத்திட்டேன் பெரியம்மா. இந்திக்காரங்களால என் பேரை சரியா உச்சரிக்க முடியல. கமலஹாசன் 'கமல்'ஹாசன் ஆன மாதிரியும், மல்லையா 'மல்யா' ஆன மாதிரியும் 'கமலா'வான நான் 'கம்லா' ஆகிட்டேன் பெரியம்மா.
@@@@@@
சரிடி கமலா. நீ வேற கோவிச்சுக்குவ.‌ சரிடீ கம்லா. உனக்கு (இ)ரண்டாவது கொழந்தை பெண் கொழந்தையாப் பொறந்தா அதுக்கு 'கோலா' (GoLaw)னு பேரு வச்சிருடி. ஏன்னா நீ துன் 'கம்லா' (ComeLaw) ஆச்சே.
@@@@@@
போங்க பெரியம்மா. பேருங்களக் கிண்டல் பண்ணறதே உங்களுக்கு வேலையாள் போச்சு.
@@@@@
உம் பையனுக்கு என்ன பேரை வச்சிருக்கிற?
@@@@@@
எம் பையன் பேரு 'புல்கிட்' (Pulkit).
@@@@@@
ஏன்டி கம்லா, பெரிய படிப்புப் படிச்சிட்டு வடக்க போனா இந்திப் பேரை வச்சுக்கணும்னா தலையெழுத்தா?
@@@@@
இங்க தமிழ் நாட்டில் மட்டும் என்ன நடக்குது. 'கமலா'ங்கிறதே இந்திப் பேருதான். 'கமலா'ன்னா 'தாமரை'-னு அர்த்தம். எம் பையனுக்கு 'புல்கிட்'னு அருமையான பேரை வச்சிருக்கிறோம். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேரை வச்சா யாரு மதிக்கிறாங்க?
@@@@@@
புல்லுக்கட்டு இந்தில 'புல்கிட்' ஆகிடுச்சு போல. சரி. சரி.
ஆமாம்டி கம்லா. நீ சொல்லறதும் சரிதான்டி.‌ காலம் கெட்டுப் போச்சுடி. இனி தமிழர்கள் திருந்தப் போறதில்ல.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
Pulkit = happy, thrilled, overjoyed.

எழுதியவர் : மலர் (14-May-22, 8:56 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 97

மேலே