EN KAVITHAIP PUTHTHAKATHTHAI NAANE PATITHTHEN

அச்சிட்டு வெளியிட்ட
என்கவிதைப் புத்தகத்தை
வாங்கிப் படிக்காததால்
விற்காததால் வெகுண்டு
குப்பைத் தொட்டியில்
விட்டெறிந்தேன்
தெருவோர நாய் ஒன்று
தாவிச் சென்று கவ்வி வந்து
என்னிடமே தந்தது
மொழியறியா வாயில்லா
இச்சீவனுக்கு உள்ள
தமிழ் நன்றியறிதல் கூட
எனக்கில்லையே என்று
வருந்தினேன்
அட்டைமுதல் கடைசிவரை
ஒவ்வொரு பக்கத்தையும்
கண்ணில் ஒற்றி ஒற்றி
மீண்டும் மீண்டும்
என் கவிதைப் புத்தகத்தை
நானே படித்தேன் .

எழுதியவர் : KAVIN CHARALAN (14-May-22, 11:17 am)
பார்வை : 52

மேலே