ஒட்டைத்தயிர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தீபனமும் உண்டாஞ் சிறுகரப்பான் புண்ணுமாம்
பூபதிபோன் மேனி புளகிக்குந் - தாபதமாம்
ஒட்டைத் தயிர்நிதமும் உண்ணவதி தாகம்போந்
துட்டக் கிருமியறுஞ் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
ஒட்டைத் தயிரினால் நற்பசி எடுக்கும்; சிறுகரப்பான், இரணம் இவை உண்டாகும்; தாகமும், மலக் கிருமிகளும் நீங்கும்; மேனி வனப்புண்டாகும்

