சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகன் - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பாக்கள்
சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகனே
வேழமுனை வேண்டுகிறேன்; நூறுடனே - ஏழுமொன்றும்
வெண்பாக்கள் செய்திடவே வேண்டும் வரமருளி
எண்ண(ம்)நிறை வேற்று நீ! 1
சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகன்
வாழவந்த மக்கள் வளமுடன் - வாழவே
அன்புடனே ஆதரித்(து) எந்நாளும் காத்திடுவான்;
இன்பமே என்றும் இனித்து! 2
கருணை வழிகின்ற காருண்ய மூர்த்தி
அருமை விநாயகனாம் அண்ணல் - திருவாக
சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகன்
வாழவைப்பான் என்றும் கனிந்து! 3