அன்புள்ள அழகு அப்பா 555

***அன்புள்ள அழகு அப்பா 555 ***


அன்புள்ள அப்பா...


நீங்கள் காணாத உலகத்தை
என்னை காண வைத்தீர்கள்...

அம்மாவின் குறுக்கில்
ருக்கும் போது...

மண்ணையும்
மக்களையும் பார்த்தேன்...

அப்பா உங்கள்
தோளில் இருந்தபோது...

காயத்தை
பார்த்து அதிசயித்தேன்...

நீங்கள் பார்காதத்தை
நான் பார்த்தேன்...

அம்மாக்கள்கூட
சொல்
லிவிடுகிறார்கள்...

பத்து மாதம் சுமந்தேன்
சுமந்தேன் என்று...

காலமெல்லாம்
நீங்கள் சுமந்தாலும்...

ருமுறைகூட
அப்பாக்கள் சொல்லிவிடுவதில்லை...

உன்னை
சுமக்கிறேன் என்று...

நாளெல்லாம் வியர்வை
சிந்தி உழைத்து வந்தாலும்...

எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க
யோசித்ததில்லை
...

சேர்ந்து விளையாடவும்
சலித்ததில்லை...

சின்ன வலிகள் என்றாலும்
சொல்லி அழும்
ம்மாக்கள்...

எத்தனை வலிகள் என்றாலும்
உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு...

கண்ணீரையும் வெளிப்படுத்தாமல்
வாழும் தெய்வம் அல்லவா நீங்கள்...

தாய்க்கு பின் தாரம்
என்று
சொல்கிறார்கள்...

தந்தைக்கு பின்
இன்னொருவரை...

இன்றுவரை யாரும்
சொ
ன்னதில்லை இணையாக...

கோபம் கொண்டு
நீங்கள் அடித்த போது...

சில நிமிடத்தில் என்
வலிகள் மறைந்துவிட்டது...

அடித்தத்தை நினைத்து இரவெல்லாம்
உறங்காமல் கலங்கியதை...


என் பிள்ளையை நான் அடித்த
போதுதான் இன்று உணர்ந்தேன்...

அப்பா உங்கள் தந்தை உங்களை எப்படி
பார்த்து கொண்டாரோ தெரியவில்லை...

உங்கள்
தந்தையை போல...

பத்து
விழுக்காடாதவது...

நான் உங்களை பார்த்து
கொள்ள வேண்டும் அப்பா...

அப்பா
ஐ லவ் யூயூ.....


***முதல்பூ.பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (31-May-22, 8:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 232

மேலே