அரிசி - வேலம்பட்டை - தெங்கு இவைகளின் மது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சாலி மதுவாதத் தாற்சளிநீர் உண்டாக்கும்
வேலி(ன்)மது பித்தழைக்கும் வேண்டாவாஞ் - சாலவுயர்
தெங்கி(ன்)மது சீதந் திரிதோஷம் உண்டாக்கும்
அங்குவிடு கள்குலையே யாம்

- பதார்த்த குண சிந்தாமணி

அரிசியில் இறக்கிய சாராயம் விருத்தி, வாதகபம், நீரேற்றம் இவற்றை யுண்டாக்கும். வேலம்பட்டைச் சாராயம் பித்தத்தை வருவிக்கும். தென்னங்கள் குளிரச்சியையும், வாத, பித்த தோடங்களையும் உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-22, 11:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே