அத்தி மது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அத்திமே கஞ்சூ(டு) அதிமயக்கந் தாகமும்போம்
அத்திமர வேரிலண் டாமதுவில் - நித்தியமுஞ்
சீனியெ னும்பேயன் செங்கனியே னுங்கலந்தே
பானுவுத யங்குடித்துப் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

அத்தி மரவேரிலிறங்கிய கள்ளில் சீனிச்சர்க்கரை , பேயன் வாழை கலந்து தினமும் சூரியன் தோன்றும் நேரத்தில் உண்டால் அத்தி மேகம், உட்சூடு, மூர்ச்சை, தாகம் இவை நீங்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-22, 11:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே