லஞ்ச பேய்தான் சிறகடித்து பறக்கிறான்
பண வெறியில் பண்பிழந்து
மாண்பினை மண்ணில் புதைத்து
மானிடத்தினை அழிக்கும் துரோகம்
துளியும் தகுதி இல்லாத தரம் கெட்ட
மனிதர்களின் உறைவிடம்
நீதியை நிர்மூலமாக்கி வேடிக்கை பார்க்கும்
குரூரம்
லஞ்ச பேய்தான் சிறகடித்து பறக்கிறான்
மனித உயிர்களை சிதைக்கிறான்
ஏ மதியில்லா மானிடபதரே லஞ்சத்தை ஆதரிக்காதே நாளை உன் அமைதியும் அழியும்
நேரம் வெகு தூரமில்லை