KALEESWARAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : KALEESWARAN |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 24-Jun-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2022 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 36 |
உங்களின் வார்த்தை கேட்க ஒவ்வொரு தினமும் ஆவலோடு காத்து இருப்பேன்..
வரலாறு வளமாகும் பூகோளம் புன்னகைக்கும், அறிவியல் அழகியல் ஆகும், தமிழோ தலை நிமிர்ந்து நிற்கும் நீங்கள் வெறும் ஆசிரியர் அல்ல எங்களின் ஆன்மா..
நெருப்பு பொறியில் நீந்தி நதியின் சலனம் போன்ற சிந்தையில் எண்ண குவியல் பெருகும் சில தருணம் அது கடல் பல நிலையில் குளம் மன குதிரையை கட்டும் ஞானி யாரும் இக் கலியில் இல்லை போலும்
அன்பு நீருற்று என பொங்கிவரும்
எந்த நேரத்திலும் உதவியென கேட்டால் கரங்கள் நீளும்
சண்டைகள் வந்தாலும் சில தினங்களில் கசப்பு மறையும்
நட்பு என்பது உணர்வுகளின் ஒருமைப்பாடு சிந்தனைகளின் சங்கமம்
சில சூழலில் தாழ்ந்தும் சில தருணத்தில் உயர்ந்தும் விளையாடும் கடல் அலை
நட்பின் மதிப்பு மிக உயர்வானது!
குழந்தையின் இதழ்கள் பூ போல மலரும்
அதை காண்போரின் மனதில் மகிழ்ச்சி மலரும்
உன் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றியோடு
இருப்பினும் மழலை தனம் கொண்ட வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஈடாகாது.
மேகத்தில் இருந்து சொட்டும் நீர்திவளைகள்
பூமிதாயின் மடியில் விழுந்ததும் மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தையின் மனம் போல இருக்கும்
மைவிழிப்பாவையின் கடைக்கண் பார்வையில் ஆடவன் சிந்தனைகள் முழுதும் அவள் மேலே மெல்லுணர்வு அவன் மேனியை தீண்டினாலும் உடல் முழுதும் காந்த அலைகள் தாக்கம் பறவையின் சிறகில் அடித்தால் வலிக்கும் வித்தை அவன் அறிந்தான் அன்று
கன்னக் குழிவால் என்னில்
கனவுத் திரையை விரிக்கிறாய் !
மின்னல் விழிகள் இரண்டால்
ஒளிக்கீற்றை அள்ளித் தெளிக்கிறாய் !
மின்னும் கருங்கூந்தலை தவழவிட்டு
ஒருவானவில்லை என்னில்
விரிக்கிறாய் !
புன்னகையை மெல்லிதழில்
தவழவிட்டு
காதல் போர்முரசு கொட்டுகிறாய் !
ஆ வி
எந்த தருணமும் முகத்தில் தவழும் புன்னகை
காரணமின்றி கண்களில் மின்னும் காதல்
இறைவனே இறங்கி வந்தது போல் ஓர் உணர்வை அவதானிக்கிறேன்
மழலை உதிர்க்கும் சிரிப்பில் சற்றே தடுமாறித்தான் போய்விட்டேன்