அரக்கு விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பாக்கள்
அரக்கு விநாயகர் பாதம் பணியும்
கரவில்லா பக்தர்க்கு குன்றா - அருள்செய்தே
எஞ்ஞான்றும் நன்மைதரும் நாயகனை என்றுமே
நெஞ்சத்தில் வைப்போம் நினைந்து! 1
அரக்கு விநாயகனின் ஆனந்த நாமம்
ஒருமுறை சொன்னாலே ஓங்கு - வரமருளி
எந்நாளும் காத்திடும் ஏந்தலை காலமெலாம்
வந்தனை செய்தே வழுத்து! 2
வழுத்துதல் - போற்றுதல்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
