என்ன வாழ்க்கை இது
என்ன வாழ்க்கை இது...
என்ற வார்த்தை அது
எந்தன் வாழ்விலும்
எதிர்பாரா வண்ணமாய்
வந்து வந்து போகிறது...
இந்த நொடிப்பொழுதும்
உந்தன் சொந்தமில்லை
என்றுணர்த்தும் சிந்தனைகள்,
வெந்து தனிந்த காட்டில்
கூடுகட்டிக் குந்தும்
வேடந்தாங்களாக
நொந்து போன நெஞ்சில்
கொஞ்சம் வஞ்சம் தீர்கிறது...
விந்தையான உலகமிது
வேடிக்கை மானுடராய்
வாழ்வது எளிது எனும்
பாரதியின் வரிகளும்
பக்கம் வந்து நின்று
பகிடி செய்கிறது...
எத்தனையோ சிந்தனைகள்
எட்டி எட்டி பார்த்தாலும்
எள்ளிநகை பூத்தாலும்
இத்தனை நாட்களை நானும்
அத்தனை ஆறுதலாய்
மெத்தன கடத்தியிருக்கிறோம்
என்று என்னும்பொழுது...
சட்டெனக் கண்விழிக்கும்
சட்டையில்லா சன்னியாசியாக
ஆசைகளை மூட்டைக் கட்டிவிட்டு
இதயம் எனும் இருண்ட காட்டில்
விரக்தியின் வெளிச்சத்தில்
இறுக்கத்தோடு இரக்கமாய்
நெருக்கமான உறவில் நான் !!!
M.S.M.Mafaz