தியானம்

மனிதா
ஆடாமல் அசையாமல்
நின்று நிலைத்து
எரிகின்ற தீபத்தின்
முன்னால் அமர்ந்து
"தியானம்"
செய்கின்றபோது
கவலைகளை சுமந்து
நிம்மதியில்லாமல்
அசைந்து ஆடும்
உந்தன் மனம்
அமைதி பெற்று
சலனமில்லாமல்
நிலைத்து நிற்கும்...!!

அது எப்படி சாத்தியம்
என்று கேள்வி கேட்டால்
அதற்கு பதில் சொல்லி
விளக்கம் கொடுக்க
யாராலும் இயலாது
உணரும் போதுதான்
அது தெளிவாக புரியும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Jun-22, 2:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thiyanam
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே