எனக்கு வலிகொடுத்த உன் இதயம் 555
***எனக்கு வலிகொடுத்த உன் இதயம் 555 ***
நினைவானவளே...
என் இதயத்தை துடிக்க வைப்பது
உன் நினைவுகள் தான்...
யாருக்கு தெரியும் என்
நினைவெல்லாம் நீயென்பது...
உன் நினைவுகளோடு பேச
நினைத்தால் கண்கள் கலங்குகிறது...
உறங்க சென்றால் உன்
நினைவுகள் விடுவதில்லை...
என் காதல் தேர்வில் நான் பெற்ற
தேர்ச்சி விழுக்காடு எத்தனையோ...
பகலெல்லாம் நான்
நட்புகளோடு இருந்தாலும்...
இரவில் உன் நினைவுக்கும்
எனக்கும் நெருக்கம் அதிகம்...
என் இதயத்தின் வலியை என் கண்கள்
கண்ணீராய் வெளிக்காட்டுகிறது...
எனக்கு வலிகொடுத்த உன் இதயம்
உணரப்போவது எப்போதோ...
ஒவ்வொரு நொடியும் உன்னை
நான் காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்...
நான் இறப்பது எளிது
உன்னை மறப்பது கடினம்...
உணர்வாயா நீ...
உன் இதயத்தை
முற்றுகையிட காத்திருக்கிறேன்.....
***முதல்பூ.பெ.மணி.....***

