வலிகளை சுமக்கும் சுமைதாங்கி நான் 555

***வலிகளை சுமக்கும் சுமைதாங்கி நான் 555 ***



என்னுயிரே...


அழகாக நான் ரசித்த தனிமையை
இன்று வெறுமையுடன் காண்கிறேன்...

உன்
னுடன்
பேச நினைக்கிறேன்...

நீ என் அழைப்புகளை
எடுக்கவே மறுக்கிறாய்...

என்னை மறந்துவாழ
முடிவெ
டுத்தவள்...

என் கைபேசி எண்களை
தடை செய்திருக்கலாம்...

மீனும் மீண்டும் உனக்கு
அழை
ப்பு கொடுக்க மாட்டேன்...

என்னருகில் நீ
இருந்த போதெல்லாம்...

வார்த்தைகள்
வர மறுத்தது...

இன்று வார்த்தைகள் வருகிறது
கேட்கத்தான் நீ இல்லை அருகில்...

உன் மௌனத்தைவிட்
டு
என்னிடம் பேசிவிடு...

என் கனவுகள்
கலைந்தது கண்களில்தான்...

உன் நினைவுகள்
கலையவில்லை என் நெஞ்சில்...

காலமெல்லாம் உன்னை சுமப்பேன்
என்று சொன்னதிற்க்காகவா...

நீ கொடுத்த வலிகளை சுமக்கும்
சுமைதாங்கியா
ய் ஆக்கிவிட்டாய்...

உனக்காக துடிக்கும் என் இதயம்
துடிப்பை நிறுத்திவிட்டால்...

என்னை பார்க்க
மட்டும் வந்துவிடாதே...

பொல்லாத என் மனம்
ஆவியானாலும் உன்னை நினைக்கும்
.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (4-Jun-22, 8:53 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 454

மேலே