நம் உதடுகள் உரசி தீமூட்ட வேண்டும் 555

***நம் உதடுகள் உரசி தீமூட்ட வேண்டும் 555 ***
காதல் நிலவே...
நானும் காதல்
கொண்டேன் உன்மீது...
உனக்கு
மலர்கள் மீது காதல்...
எனக்கு மங்கை
உன்மீது காதல்...
என் உதடுகள்
சொல்ல தயங்குவதை...
என் இதயம்
சொல்ல துடிக்குது...
என் மனதை
அறியாதவள் போல...
மௌன புன்னகையோடு
தினம் கடந்து செல்கிறாய்...
காதலுக்கு கண்ணில்லை
உருவம் இல்லையென்கிறார்கள்...
எனக்கு இரண்டுமாக
நீ இருக்கிறாய்...
நான்
எப்படி நம்புவேன்...
சான்றோர்களின் கூற்று
உண்மையென்று...
கடிகார முட்கள் போல
நீயும் நானும்...
நான் பல அடிகள் வைத்தால்தான்
நீ ஒரு அடி வைக்கிறாய்...
நீ யாரென்று
தெரிந்துகொள்ள ஆர்வமில்லை...
உன்னை முழுவதுமாக
புரிந்துகொள்ளவே ஆசை...
உன் உதடுகள் உரசி
நீ என்னுள் தீமூட்ட வேண்டும்...
என் உதடுகள் உரசி
உன்னுள் நான் தீயணைக்க வேண்டும்...
என்னை
கடக்கும் நிமிடங்களும்...
இனி கடக்க
போகும் நிமிடங்களும்...
உனக்காக மட்டுமே
என் ப்ரியசகியே.....
***முதல்பூ.பெ.மணி.....***