030 திருஅரதைப் பெரும்பாழி அரித்துவாரமங்கலம் - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

திருஞானசம்பந்தர் பதிகங்கள் - மூன்றாம் திருமுறை
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
(கூவிளம் 4)
(’ய்’ இடையின ஆசு)

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொ’ய்’த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 1

பொழிப்புரை:

இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும்!

குறிப்புரை:

பைத்த பாம்பு – படத்தையுடைய பாம்பு;

முழக்கம் முதுகாடு - முழக்கத்தையுடைய முதுகாடு,

நடம் ஆடி வெண்ணீற்றை அணிந்த பித்தர் கோயில் என்க .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-22, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே