தன்னிறைவு கொண்டமனம் தளர்வெதுவும் அறியாது - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
ஒன்றினையே நினைத்திருந்தும் ஊருக்கே
..வாழ்ந்திருந்தும் உயிர்,கொ டுத்தும்
அன்புகொண்டு வாழ்வதுதான் ஆக்கமென்று
..சொல்லிடுவேன் அறிந்து கொள்வீர்!
தன்னிறைவு கொண்டமனம் தளர்வெதுவும்
..அறியாது தகவாய்ச் சொன்னேன்;
இன்பமெலாம் வந்தணைக்கும் இன்னலெலாம்
..நீங்கிவிடும் ஏற்றந் தானே!
- வ.க.கன்னியப்பன்

