கண்விழிப் புகுந்து கருத்தினில் கலந்த பெண்ணே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கண்விழிப் புகுந்தே என்றன்
..கருத்தினில் கலந்த பெண்ணே;
எண்டிசை யலைந்துந் தேடி
..ஏற்றவள் உனையே கண்டேன்!
ஒண்டொடி யாளே நீயும்
..உயர்வெனப் பரிந்தே வந்து
கண்ணளி யொத்த வாழ்வுங்
..கனிவுடன் தருவாய் நீயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-22, 10:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே