சுகமேதென மனம்வாடிடத் துவளாதிரு நலமே - சந்தக் கலிவிருத்தம்

சந்தக் கலிவிருத்தம்
(கனி 3 மா)

புகழ்சேர்ந்திடப் பொன்னின்சுகம் பொங்கும்மன இறையே
பகுத்துண்டிடும் நினைவுங்கொளப் பண்பும்மிகப் பெறவே
நகைப்பிற்கிடம் அமையும்வகை நடவாதிரு மனமே;
சுகமேதென மனம்வாடிடத் துவளாதிரு நலமே!

- வ.க.கன்னியப்பன்

எடுத்துக் காட்டு:

சந்தக் கலிவிருத்தம்
(கனி 3 மா)

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே 4

- 015 திருநெய்த்தானம், முதல் திருமுறை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-22, 11:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே