பகையே போ

பகையே போ..
( அறுசீரடி ஆசிரிய விருத்தம் )
-----------------
நெஞ்சில் பாயும் வேலாம்
நெருஞ்சி முள்ளே பகையேபோ /
கொஞ்சும் அன்பைக் கெடுக்கும்
கொடிய தீதாம் விடமேபோ /
தஞ்சம் என்றே வந்தோர்
உள்ளம் தகர்க்கும் பிணியேபோ !
வஞ்சம் மிகவே உறவை
வதைக்கும் வம்பே விலகிப்போ!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (10-Jun-22, 3:16 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 39

மேலே