உளுந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செய்யவுளுந் திற்குச் சிலேஷ்மவனி லம்பிறக்கும்
வெய்யபித்தம் போம்மந்தம் வீறுங்காண் - மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக்(கு) அதிபலமாம்
முன்பு விருத்தியுண்டாம் முன்
- பதார்த்த குண சிந்தாமணி
உளுந்து சிலேட்டுமத்தையும், வாதத்தையும் உண்டாக்கும்; இடுப்புறுதி, மிகு வீரியம் இவற்றை யுண்டாக்கும்; பித்தமும் எலும்புருக்கி நோயும் நீங்கும்

